பொதுவாக சினிமாவில் நடிகைகளை விட நடிகர்கள்தான் அதிக காலம் நடிக்கிறார்கள் அந்தவகையில் சில நடிகைகளுடன் நடித்த நடிகர்கள் இன்னும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடி ஆடி வருகிறார்கள், நடிகர்கள் மட்டும் 40 முதல் 50 வருடங்கள் கடந்தாலும் இன்னமும் இளமையுடன் இளம் நடிகைகளுடன் நடித்து வருகிறார்கள்.
ஆனால் நடிகைகள் மட்டும் ஐந்து வருடங்கள் முதல் பத்து வருடங்கள் வரை சினிமாவில் தாக்குப் பிடித்தாலே மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது, அதிலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்கள் தாக்கு பிடிக்கிறார்கள் சினிமாவில். அதன் பிறகு அக்கா அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டும்தான் அழைக்கிறார்கள்.
ஆனால் நடிகர்கள் மட்டும் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடித்து வருகிறார்கள், இந்த நிலையில் பலர் நடிகைகள் 35 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி 35 வயது ஆகியும் நடிக்கும் ஒரு சில நடிகைகள் ஒருபுறம் இருக்கட்டும், 35 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் சில நடிகைகள் இருக்கிறார்கள் அவர்கள் யாரென்று இங்கே பார்க்கலாம்.
த்ரிஷா 36 வயது, நயன்தாரா 35 வயது, அனுஷ்கா ஷெட்டி 38 வயது, காஜல் அகர்வால் 34 வயது, சுருதிஹாசன் 34 வயது, வரலட்சுமி சரத்குமார் 35 வயது, நக்மா 45 வயது, சதா 36 வயது, பூஜா குமார் 43 வயது, ஆண்ட்ரியா 34 வயது, நீத்து சந்திரா 35 வயது, கோவை சரளா 58 வயது.
இந்த லிஸ்டில் உள்ள நடிகைகள் சிலர் காதல் சர்ச்சையில் சிக்கி அதிலிருந்து மீண்ட அவர் களும் இருக்கிறார்கள்.