300 கோடிக்கு பலே திட்டம் போட்ட கமலஹாசன்.! இயக்குனர் போட்ட கட்டளை.!

kamal-tamil360newz
kamal-tamil360newz

சினிமாவில் சமீப காலமாக ஒருவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை, திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் 1983ஆம் ஆண்டு உலக கோப்பை பெற்றுக்கொடுத்த கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.

 இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடிகர் ஜீவா ஆகியோர் நடித்துள்ளார்கள் படத்திற்கு 83 என்ற டைட்டில் வைத்துள்ளார்கள், இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ளது, மேலும் படத்தில் கபீர் கான், தீபிகா படுகோன் விஷ்ணு இந்தூரி சஜித் நாதியத்வாலா phantom films ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் காய்களில் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது, ஆனால் கொரோனா பிரச்சனையால் இந்த திரைப் படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வெளியிட இருந்தார்.

படத்தின் வெளியீட்டு தடை ஏற்பட்டதால், 83 படத்தை OTT யில் வெளியிடலாம் என தகவல் வெளியானது,  மேலும் இந்த திரைப்படத்தில் ஜீவா தமிழக கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படத்தின் இயக்குனர் கபீர் கான் கண்டிப்பாக இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என உறுதியாக கூறிவிட்டாராம்.

மேலும் அவர் கூறியதாவது 83 திரைப்படம் குறித்த தேதியில் வெளியாகி இருந்தால் இந்த திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளார்.