Actor Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவரது ஏராளமான பழைய நினைவுகளை இணையதளத்தில் நினைவூட்டி வருகின்றனர். சினிமாவில் கொடிக்கட்டி பறந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்கினார்.
மிகச் சிறந்த ஆளுமை கொண்ட கேப்டன் விஜயகாந்த் திடீரென உடலில் குறைபாடு ஏற்பட்டதனால் ஓய்வெடுக்க தொடங்கினார் இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்தார். இவ்வாறு ஏராளமானவர்கள் விஜயகாந்த் குறித்து பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இதனை அடுத்து விஜயகாந்த் நடித்த காலகட்டத்தில் இவருடன் இணைந்து நடித்த ரஜினி, கமல்ஹாசன், குஷ்பூ போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
1990களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்கள் தான் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் ராம்கி உள்ளிட்டவர்கள். இவர்களுடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது எனவே இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. அப்படி அப்பொழுதும் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார்.
அதன்படி ரஜினிகாந்த் ஒரு படத்திற்காக 60 லட்சம் ரூபாய், கமல்ஹாசன், விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோர்கள் படத்திற்காக 20 லட்சம் ரூபாயும், இளைய திலகம் பிரபு 15 லட்சம், நடிகர் நவரச நாயகன் கார்த்திக் 10 லட்சம், ராமராஜன் 2 லட்சம், ரகுமான் 4 லட்சம், ராம்கி, முரளி, கனகராஜ் மற்றும் கவுண்டமணி போன்ற நடிகர்கள் 4 லட்சம் பெற்றுள்ளனர்.
இவர்களை அடுத்து முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த குஷ்பு 3 லட்சம் ரூபாயும், கௌதமி 1.5 லட்சம் ரூபாயும், பானுப்பிரியா 2 லட்சம் ரூபாயும், ரூபினி, சில்க் ஸ்மிதா, நிரோஷா ஆகியோர் ஒரு லட்ச ரூபாயும் சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.