Tamil Movies: வாரம் தோறும் திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த் நடித்திருக்கும் சித்தா போன்ற திரைப்படங்கள் வெற்றிப் நடை போட்டு வருகிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில் மூன்று aதிரைப்படங்கள் வெளியானதால் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் சந்திரமுகி 2 வசூலில் கல்லாகட்டி வருகிறது. சந்திரமுகி படத்தினை பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ், கங்கனா ரானாவத் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 2வது பாகத்தில் அனைத்து கேரக்டர்களும் சொதப்பி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனை அடுத்து ஜெயம் ரவியின் இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் சொல்லும் அளவிற்க்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதேபோல் சித்தார்த் நடித்திருக்கும் சித்தா படமும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் வாரம் தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மூன்று வெளியாக உள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படமும்..
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் படமும், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 போன்ற மூன்று திரைப்படங்களும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே நேரத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.