Tamil Actors: தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு அடுத்தடுத்து ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுவே முதன்முறை எனக் கூறலாம். சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்து வருகிறது.
அப்படி ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு படங்களும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இவ்வாறு இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித் மூன்று பேரும் தங்களது அடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். அப்படி விஜய் நடிப்பில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று லியோ திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
லியோ படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் இணைந்துள்ளார். அதற்கான பணிகளும் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் கேரளா சென்றிருக்கும் நிலையில் பழமையான பங்களா ஒன்றில் படபிடிப்பு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து விஜய் தனது 68வது நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. அப்படி பிரசாந்த் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.
தற்பொழுதுதான் சில மாதங்களுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது அதன்படி அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமாகிறது. மேலும் நடிகர்கள் கமலஹாசன் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 233வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு முதன் முறையாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது.