villain Role: ஹீரோவாக நடித்து வந்த பல நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இவ்வாறு ஹீரோவாக பிரபலமாகி வில்லனாக நடித்து வரும் நடிகர்களையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் வில்லன் நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி ஹீரோவாக சினிமாவில் கலக்கி வந்த விஜய் சேதுபதி வில்லனாக தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.
அதேபோல் சூர்யாவும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மிரட்டினார் இவ்வாறு இவர்களை தொடர்ந்து இதுவரையிலும் வில்லன் ரோலில் நடிக்காத 3 பிரபலங்கள் 2024ஆம் ஆண்டில் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க உள்ளனர்.
மோகன்: 80,90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த மோகன் தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்திற்கு GOAT என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரண்டு வில்லன்களில் ஒரு வில்லனாக மோகன் நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ்: வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என பெயர் வைக்கப்பட்டுள்ளது இப்படத்தில் முதன் முறையாக ரஜினிகாந்துக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!
அபிஷேக் பச்சன்: ஹிந்தியில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் அபிஷேக் பச்சான் தமிழில் முதன் முறையாக ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்கிறார். தனி ஒருவன் படத்தினை மோகன் ராஜா இயக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.