Sun Pictures: ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ். அடுத்தடுத்து மாஸ் திரைப்படங்களை கொடுத்து வரும் சன் பிக்சர்ஸ் மக்கள் மத்தியில் எந்த நடிகர்களுக்கு மவுசு இருக்கிறதோ அந்த நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து தங்களது தயாரிப்பில் படங்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.
நடிகர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் முதல் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வரை பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில் குறைவான பட்ஜெட்டில் உருவாகி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கல்லாப் பெட்டியை நிரப்பிய டாப் 3 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
3. நம்ம வீட்டு பிள்ளை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரிக்க பாண்டியராஜ் இயக்கினார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டி இமான் இசையமைப்பில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாம் ஆனால் உலக அளவில் 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
2. திருச்சிற்றம்பலம்: தனுஷ் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமாக வெளியான திருச்சிற்றம்பலம் படத்தினை மித்ரன் ஆர் ஜஹவர் இயக்கினார். இப்படத்தினை சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் உலகளவில் ரூ.110 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
கையில் கட்டு போட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பேசும் சூரி.! கருடன் பட வீடியோ இதோ..
1. காஞ்சனா 3: ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் 2017ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கிய நிலையில் உலகம் முழுவதும் 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாம்.