3 நாள் முடிவில் அருள்நிதியின் “தேஜாவு திரைப்படம்” – அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

arul nithi
arul nithi

நடிகர் அருள்நிதி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன குறிப்பாக இவர் நடித்த மௌனகுரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் ரொம்பவும் ஃபேவரட்டான படங்களாக பார்க்கப்படுகின்றன.

ஏன் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தி பிளாக் திரைப்படம் கூட மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சீனிவாசன் இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் தேஜாவு.

இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இருந்துள்ளது மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தில் அவருடன் இணைந்து ஸ்சுமர்தி வெங்கட், சூப்பர் குட் சுப்பிரமணி, கோபி, மாதோ மற்றும் பலர் நடித்து அசதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது முதல் நாளே நல்ல வசூலை அள்ளி உள்ளது இந்த திரைப்படம்.

இப்படி இருக்கின்ற நிலையில் தேஜாவு திரைப்படம் வெளியாகி இதுவரை சுமார் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில்  எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது தமிழகத்தில் மட்டுமே சுமார் ரெண்டு புள்ளி ஒரு கோடி வசூல் செய்துள்ளது சென்னையில் மட்டும் 25 லட்சம் வசூல் செய்துள்ளது.

வருகின்ற நாட்களில் எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் நிச்சயம் தேஜாவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் சில கோடிகளை அள்ளி வெற்றி படமாக மாறும் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே மாறுகின்றன அதனால் அவரது மார்க்கெட்டும் அதிகமாகிறது சம்பளமும் சற்று உயர்த்த உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.