மூன்றாவது நாளில் இந்தியன் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா…?

1996 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது , மேலும் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது பாகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த இரண்டாவது பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது..

மேலும் இந்தியன் திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல், விவேக், மனோபாலா, பாபி சிம்கா, ப்ரியா பவானி சங்கர், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் கடந்த 12ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது.

அதேபோல் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் அதிலிருந்து சில நிமிடங்களை துண்டிக்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள் அதனால் படம் பரபரப்பாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் அமையும் என படக்குழு எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது..

அதேபோல் தமிழகத்தில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது ஆனாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது இன்னும் சில நாட்கள் திரையரங்கில் இந்தியன் 2  ஓடினால் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.