வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் துணிவு திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் துணிவு திரைப்படத்துடன் வாரிசு திரைப்படம் மோத உள்ளது என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்கள் வெளியாகி வந்த நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து தற்போது சில்லா சில்லா என தொடங்கும் ஒரு பாடல் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் துணிவு திரைப்படத்தில் ஓபனிங் சாங் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வெளியான சில மணி நேரங்களில் பல மில்லியன்கள் பார்வையாளர்களை தாண்டி உள்ள இந்தப் பாடலில் பிக் பாஸ் பிரபலங்களும் நடனமாடியுள்ளார்கள் அதுமட்டும் இல்லாமல் இந்த 3 பிரபலங்களும் துணிவு திரைப்படத்தில் அஜித் டீமில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடைய அந்த புகைப்படங்களும் அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
ஆம் பிக் பாஸ் சீசனில் பிரபலமான அமீர் மற்றும் பாவனி, சிபி ஆகியோர் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளார்கள். சிபி அவர்கள் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை தொடர்ந்து அஜித் திரைப்படத்திலும் தற்போது சிபி அவர்கள் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் அது மட்டுமல்லாமல் இவர்களுடைய மாஸ் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது. துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக உருவாகியுள்ளதால் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸில் பிரபலமான மூன்று பிரபலங்களும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது மேலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த மூணு பிக் பாஸ் பிரபலங்களும் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். படம் வெளியானால்தான் தெரியும் இவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று.