3 – நாள் முடிவில் மட்டும் சர்தார் திரைப்படம் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

sardar

அண்மைக்காலமாக டாப் ஹீரோக்கள் பலரும் நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.. குறிப்பாக பொன்னியின் செல்வன், விருமன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன..

அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் பி. எஸ். மித்திரனுடன்  கைகோர்த்து நடித்த திரைப்படம் சர்தார்.. இந்த படம் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஸ்பை சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது இந்த படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால்..

படம்  மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து லைலா, ராசி கண்ணா,  முனிஷ் காந்த்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் அதுதான் இந்த படத்திற்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

இந்த படம் தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக இந்த படத்தின் பதில் சொல்லும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும்..

இதுவரை கார்த்தியின் சர்தார் திரைப்படம் சுமார் 14 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த படம் வசூலும் வருகின்ற நாட்களுக்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது.