சில்க் ஸ்மிதா இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு வீணாய் போன 3 நடிகைகள்.? லிஸ்ட் இதோ.

silk-sumitha

சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்க தனது திறமையை காட்டினால் மட்டும் போதாது அழகையும் காட்ட வேண்டும் அதைத்தான் தற்போது இருக்கும் நடிகைகள் செய்து வருகின்றனர். பட வாய்ப்பு இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி தனது அழகை காட்ட சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்துகின்றனர்.

ஆனால் 80, 90 கால கட்டங்களில் தனது திறமையையும் அழகையும் காட்டி பலப்பட வாய்ப்புகளை அள்ளி வருவதோடு மட்டுமல்லாமல் பல வருடங்கள் சினிமாவில் ஓடியவர் சில்க் ஸ்மிதா. அதாவது இவருக்கு ஒரு ஆண்டில் மட்டுமே குறைந்தது நான்கைந்து  படங்கள் கிடைத்து விடுமாம். அதுவும் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும்..

அதில் தனது முழு ஈடுபாட்டுடன் நடிப்பதால் இவர் நடிக்கும் படங்கள் வெற்றியை பெரும். மேலும் அந்த படங்களில் கொஞ்சமாவது கிளாமர் காட்டி விடுவாராம் அதனால் இவருக்கு ரசிகர்களும் அதிகமாகினர். 80, 90 கால கட்டங்களில் டாப் நடிகைகளை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சில்க் ஸ்மிதா தான் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பிறகு அவரது இடத்தை பிடிக்க மூன்று நடிகைகள் பிடிக்க முயற்சித்துள்ளனர் அவர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. Y. விஜயா : சில்க் ஸ்மிதா நடித்த காலத்திலேயே பல்வேறு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடவும் மற்றும் கிராமர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவர் எம்ஜிஆர், சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில்க் ஸ்மிதா ரஞ்சிக்கு வரலாம் என முயற்சித்தவர் ஆனால் அது முடியாமல் போனது ஒருகட்டத்திற்கு மேல் சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அங்கு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

mumtaj
mumtaj

2. மும்தாஜ் : நடிகை மும்தாஜ் தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால்  ஐட்டம் டான்ஸ் ஆடவும் தொடங்கினார்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில்க் ஸ்மிதா போல வருவார் என அப்பொழுது ரசிகர்கள் பேசினர் ஆனால் ஒரு சமயத்திற்கு மேல் அவர் உடல் எடை அதிகமாகி விட்டதால் சினிமா வாய்ப்பு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஷர்மிலி : இவர் ஆரம்ப காலகட்டத்தில்  காமெடி கலந்த கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். கோவை சரளா போன்ற நடிகைகளுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் இவருக்கு தென்னிந்திய சினிமா உலகில் பல வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தார் இதனால் அப்பொழுது சில்க் ஸ்மிதாவிற்கு இருக்கும் மார்க்கெட் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.