கமர்சியல் கதைக்கும் நமக்கும் செட் ஆகாது என தெறித்து ஓடிய 3 நடிகர்கள்..! அட எல்லாருமே முன்னணி நடிகர்கள் போல..!

dhanush-0000
dhanush-0000

பொதுவாக ஒவ்வொரு ஹீரோக்களும் தான் நடிக்கும் திரைப்படங்களில் ஒரு திரைப்படம் ஆவது கமர்சியல் திரைப்படங்கள் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் கமர்சியல் திரைப்படமாக அமைந்தால் பல்வேறு ரசிகர்கள் பெருமக்களும் பார்ப்பார்கள் ஆகையால் கல்லா கட்டலாம் என்பது ஒரு இயல்பான விஷயம் தான்.

ஆனால் சமீபத்தில் கமர்சியல் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேடி தேடி நடித்து வரும் 3 நடிகர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் விக்ரம் திரையுலகில் தனது பயணத்தை டப்பிங் ஆர்டிஸ்டாக ஆரம்பித்தனர் ஆனால் தற்போது இவர் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர்  திரைப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது, பின்னணிப் பாடகர் என பன்முக திறன் கொண்டவர்.

அந்த வகையில் நடிகர் விக்ரம் ஒருபோதும் கமர்சியல் படத்திற்கு  இடம் கொடுக்காமல் வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை மட்டுமே கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மகான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இதனைத் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

நடிகர் சூர்யா சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் சில நல்ல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு, பசங்க, 36 வயதினிலே, என் ஜி கே, காப்பான், சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் அனைத்துமே இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

நடிகர் தனுஷ் இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு சினிமா பக்கங்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இவர் பல்வேறு தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த வகையில் இவர் சமீபத்தில் கமர்ஷியல் திரைப்படங்களை தவிர்த்துவிட்டு நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.