இன்று உச்சத்தில் இருக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த 3 நடிகர்கள்.. உண்மையை சொன்ன இயக்குனர்

vijay
vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் உடன் கைகோர்த்து படம் பண்ண பல நடிகர் நடிகைகள் காத்துக் கிடக்கின்றனர் ஆனால் ஒரு கட்டத்தில் இவருடைய படத்தில் நடிக்க மூன்று நடிகர்கள் மறுத்துள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்,  நடிகராகவும் ஓடிக் கொண்டிருப்பவர் மாரிமுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயுடன் நடிக்க மறுத்த நடிகர் குறித்து பேசி உள்ளார் நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் அஜித் விஜயும் நடித்து வந்தனர் அந்த சமயத்தில் அஜித்  நடித்த காதல் கோட்டை படம் பெரிய வெற்றி பெற்றதால் பிஸியாக இருந்தார்.

நேருக்கு நேர் பட தயாரிப்பாளர்களும் அஜித்திற்கு நெருக்கடியை கொடுத்ததால்.  வேறு வழி தெரியாமல் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகினார் அவருக்கு பதிலாக பிரசாந்த் நடிக்க வைக்க அவரை சந்தித்தது ஆனால் பிரசாந்த் ஜீன்ஸ் படத்திற்காக ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றிவிட்டேன். அதனால் நேருக்கு நேர் படத்தில் என்னால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம்.

பிரபுதேவாவை நடிக்க வைக்கலாம் என்று பார்த்தால் ஒரு ஹீரோ ரிஜெக்ட் செய்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பதா என கூறி பிரபுதேவாவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். கடைசியாக சிவகுமாரின் மகன்  சூர்யா அழகாக இருப்பதை தெரிந்து கொண்ட படகுழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அதற்கு சிவகுமார் சினிமா என்னுடன் போகட்டும் சூர்யா நடிக்க வரமாட்டான் என படக்குழுவுடன் பேசி விட்டார் ஆனால் விடாமல் எப்படியோ பேசி சிவகுமாரை சம்மதிக்க வைத்து நேருக்கு நேர் படத்தில் விஜய் சூர்யா இணைந்து நடித்திருந்தனர் படம் வெளிவந்து சக்கபோடு போட்டதாம் இதனைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.