உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு விருவிருப்பாக போய்க்கொண்டிருக்கிறது மறுபக்கம் அடுத்த மூன்று இயக்குனர்களுடன் கைகோர்த்து கமல் படம் பண்ண இருக்கிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த கமல் என்று சொல்லப்பட்ட மூன்று நடிகர்கள் குறித்து தான் பேசப்போகிறோம்..
1. பிரசாந்த் : நடிகரும் இயக்குனருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த். முதலில் வைகாசி பொறந்தாச்சு என்னும் படத்தில் நடிகனாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், ஜோடி, வின்னர் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார் இவருடைய நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்கள் பலரும் இவரை அடுத்த கமல் என்று பேசி புகழ்ந்தனர்.
2. மலையாளத்தில் கொடி கட்டி பறந்து ஓடுபவர் நடிகர் ஜெயராம் இவர் மலையாளத்தில் எத்தனை படங்களில் நடித்தாரோ அதே அளவிற்கு தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் 90களில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர் அடுத்த கமல் என அப்பொழுது ஹாலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது.
3. நவரச நாயகன் கார்த்தி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் நல்ல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு தவிர்க்க முடியாத நடிகர் என்ற பட்டத்தை பெற்றார் ஒரு கட்டத்தில் பல மொழிகளிலும் அதிகம் கவனம் செலுத்தினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவரை பலரும் அடுத்த கமல் என கூறி வந்தனர்.