தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க போகும் மூன்று நடிகர்.! சூப்பர் ஸ்டாருக்கு பயத்தை காட்டும் ஆக்சன் ஹீரோ

jailer
jailer

விசேஷ நாட்களில் டாப் ஹீரோகளின் படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறனர். கடைசியாக கூட பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின அதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளிக்கும்..

டாப் நடிகர்களின் மூன்று படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருக்கின்றன அது குறித்து விலா வாரியாக பார்ப்போம்.. முதலாவதாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது அந்த படத்தை எதிர்த்து விஜயின் தளபதி 67 திரைப்படம்..

மற்றும் அஜித்தின் 62 படமும் மோத இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் விஜயின் தளபதி 67 திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை மாறாக ஆயுத பூஜைக்கு தான் ரிலீஸ் ஆகும் என அடித்து கூறியது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 திரைப்படம் 200 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இயக்குனர் யார் என்று இதுவரை முடிவு செய்யவில்லை மிக விரைவிலேயே  இயக்குனரை அறிமுகப்படுத்தி சீக்கிரமாக படத்தை எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் கூறுகின்றன.

கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில் தீபாவளிக்கு ரஜினியின் ஜெயிலர், அஜித்தின் ஏகே 62 படங்கள் மோதுவதால் தீபாவளி திருவிழா போல அமைந்தாலும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மட்டும் சற்று பயத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.