தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது திரைப்பயனத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் அதிலும் இவர் நடித்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தின.
இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்க்கெட் அஜித், விஜய் லெவலுக்கு உயர்ந்தது என பேசப்பட்டது ஆனால் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியதால் அந்த மார்க்கெட் அசுர வளர்ச்சியில் கீழே இறங்கியது. தற்பொழுது இதிலிருந்து மீண்டு வர மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து சிவக்கார்த்திகேயன் யாருடன் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 பினாலே போது உலக நாயகன் கமலஹாசன் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக கூறினார் மேலும் அந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்கப் போகிறார் என அறிவித்தார்.
ஆனால் அதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் பிக் பாஸ் சீசன் 6 கூட முடிந்து விட்ட நிலையில் தற்போது தான் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறியதை எடுத்து பிரியங்கா மோகனை நடிக்க வைக்கலாம் என சிவகர்த்திகேயன் சொன்னது..
அவருடைய மனைவிக்கு தெரியவர இனி சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் பிரியங்கா அருள் மோகன் நடிக்க கூடாது என அதிரடியாக உத்தரவு போட்டு விட்டாராம். இதனை எடுத்து அந்தப் படத்தில் ஹீரோயின்னாக மிருணாளினி தாகூர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கோலிவுட் வட்டாரத்திலும் இந்த பேச்சு அதிகமாக இருக்கிறதாம்.