பிரபல வில்லன் நடிகர் 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் நிலையில் அவருடைய முதல் மனைவி ரியாக்ஷன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா, தளபதி நடித்த கில்லி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசேத்திர கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.
இவருக்கு தற்பொழுது 60 வயதாகும் நிலையில் நேற்று திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை ஆஷிஷ் வித்யார்த்தி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுடைய திருமணத்தில் இரு விட்டார் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பருவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் குறித்து மறைமுகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு சரியான நபர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்க மாட்டார் அதேபோல் உங்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ள மாட்டார் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் மற்றொரு பதிவில் அதிக சிந்தனையும் சந்தேகமும் உள்ள மனதில் இருந்து நீக்கட்டும் அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும் நீண்ட காலமாக நீங்கள் வலிமையானவராக இருந்தீர்கள் உங்கள் ஆசிர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இது நீங்கள் இதற்கு தகுதியானவர்தான் என்று பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு 60 வயதில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது மேலும் இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஆஷிஷ் வித்யார்த்தி தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நிலையில் சமீப காலங்களாக வயதான காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய உள்ளார்.