சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் குணசேகரனுக்கு உச்சகட்ட பயத்தை காண்பித்திருகிறது அதனால் பல ட்விஸ்ட்களுடன் சுவாரசியமாக இருந்து வருகிறது.
அதாவது ஜீவானந்தம் அப்பத்தாவின் 40% சொத்தை தனது பெயரில் எழுதி வைத்திருந்தார் இதை குணசேகரனுக்கு தெரியவைக்கிறார். குணசேகரனும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது என கோபமாக பேச ஜீவானந்தத்தின் ஆட்கள் குணசேகரனை குண்டு கட்டாக கட்டி தூக்கி செல்கிறார்கள்.
இதனை அடுத்து ஜனனி கௌதம் ஜீவானந்தத்தினால் என்பதை தெரிந்து கொண்டார் இதனால் ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அனைத்து பிரச்சினைகளுக்கும் அப்பத்தா எழுந்தால் மட்டுமே சரியாகும். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் குணசேகரனை ஜீவானந்தத்தின் ஆட்களிடமிருந்து அழைத்து வீட்டிற்கு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் தூங்கிக் கொண்டிருக்க ஜீவானந்தம் அவரை சுட்டது போல கனவு வருகிறது இது உண்மை என்று நினைத்து குணசேகரன் எழுந்திருத்து கத்துகிறார். இதனால் குணசேகரனுக்கு என்ன ஆச்சு என வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டம் அடைகின்றனர்.
பிறகு குணசேகரனை பயப்படாதீங்க அண்ணா நான் தான் இருக்கேன்னு சொல்றல என கதிர் சமாதானப்படுத்த அதற்கு நந்தினி இதைத்தான் சொல்லிக்கிட்டு உதார் விட்டுட்டு இருக்கீங்க அங்க போயிட்டு அடி வாங்கிக்கிட்டு வந்து இருக்கீங்க என்று பேச. பிறகு கரிகாலன் சிங்கம் மாறி இருந்தீர்களே மாமா இப்படி உன்ன சரிச்சு உக்கார வச்சுட்டாங்களே என அனைவரும் கூற குணசேகரன் உடனே ஒப்பாரி வைக்கிறார்.
இதனை எல்லாம் பார்த்து மருமகள்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. சிங்கம் போல் வீட்டில் இருக்கும் மருமகள்களை அடக்கி வந்த குணசேகரன் தற்போது ஜகார்த்தனனிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். ஜகார்த்தனனும் குணசேகரனுக்கு உயிர் பயத்தை காட்டி உள்ளார்.