படம் ரிலீஸ்கூட ஆகல அதுக்குள 285 கோடி பிஸ்னஸ்சா.! சைலண்டாக மிரட்டிவரும் துணிவு ஆதிகாரபூர்வ அப்டேட் …

thunivu

அஜித் குமார் தமிழ் சினிமாவில் மூன்று சதாப்தங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இவர் அமராவதி படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை ஆரம்பித்து தனது நேர்மையாலும் திறமைகளும் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நடிகர் அஜித் அவர்கள் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவது அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புகலில் கலந்து கொள்வதையோ தவிர்ப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் அவர்கள் நடித்து வரும் துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். மேலும் துணிவு படத்தில் பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தற்போது டப்பிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  அஜித் ரசிகர்கள் துணிவு படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகுமா என காத்திருந்த நிலையில் துணிவு படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது ஜிப்ரான் இசையில் சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த நிலையில் துணிவு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு 285 கோடி பிசினஸ் செய்துள்ளதாக ஆர் கே சுரேஷ் அவர்கள் தற்போது  தெரிவித்துள்ளார்.

அதாவது துணிவு திரைப்படம் ரிலீசுக்கு முன்பாகவே தியேட்டர் உரிமையை தவிர்த்து ஆடியோ ரைட்ஸ், டிவி ரைட்ஸ், டிஜிட்டல் உரிமம், உள்ளிட்டவை மூலம் 285 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு முன்பே அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை துணிவு திரைப்படம் தட்டி உள்ளது. மேலும் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை அஜித்குமார் அவர்கள் முடித்துள்ளார் மேலும் போஸ்ட் பிரமோஷன் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது துணிவு ஒரு அதிரடி நாடகமாக உருவாக்கி உள்ளதாக கூறபடுகிறது.

thunivu
thunivu