This week OTT release: இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம். வாரம் தோறும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்கங்களில் வெளியாகி வரும் நிலையில் அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு எப்படி திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடி-ல் வெளியாகும் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏராளமானவர்கள் வீட்டில் இருந்தே ஓடிடி-ல் பார்ப்பதற்கு விரும்புகிறார்கள். இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று ஓடிடியில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்து வருகிறார்கள்.
குஷி: விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடித்த குஷி திரைப்படத்தினை இயக்குனர் ஷிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் திரையரங்களில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற நிலையில் பெற்றது. இதில் ஜெயராம், சச்சின், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல், ராமகிருஷ்ணா, முரளி வர்மா, உள்ளிட்ட ஏராளமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தின் நடிக்க இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி முதல் வெளியாகிறது.
கிக்: சந்தானம் நடிப்பில் முழு நீல காமெடி படமாக வெளியான படம் தான் கிக். கன்னடத்தில் வெளியான ஜூம் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படத்தில் தன்யா ஹோப், தம்பி ராமையா, மன்சூர் அலிக்கான், பிரம்மானந்தம், மனோபாலா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். சிம்பிளி சவுத் ஓடிடித்தளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் வெளியாகிறது.
ஹர்காரா : இப்படத்தினை ராம் அருண் காஸ்ட்ரோ இயக்க இப்படத்தில் ஜெயபிரகாஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, கௌதமி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தபால்காரரையும் சமகாலத்தில் தபால்காரராக மலைக் கிராமத்துக்கு வரும் காளி வெங்கட்டையும் இணைக்கு ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் ஹர்காரா உருவாகியுள்ளது. இப்படம் ஆஹா ஓடிடிவிட்டு தளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் வெளியாகிறது.
இந்த படங்களை தொடர்ந்து மேலும் வெளியாகும் படங்கள் குறித்த விபரம்,
அடியே – சோனி லிவ் ஓடிடி
கிங் ஆஃப் கோதா – டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்
ஏஜென்ட் – சோனி லிவ்
டர்ட்டி ஹரி – ஆஹா
Reptile – நெட்பிளிக்ஸ்
சூனா – நெட்பிளிக்ஸ் சீரிஸ்
Nowhere – நெட்பிளிக்ஸ்
ஐ கில்டு பாபு – ஜீ5
எண்ணிவர் – சைனா பிளே
ஜான்வி – ஹெச் ஆர் பிளே
பாப்பம் பாசிவடு – ஆஹா சீரிஸ்
குமாரி ஸ்ரீமதி – பிரைம் சீரிஸ்
Love Is In The Air – நெட்பிளிக்ஸ்
Encounters – நெட்பிளிக்ஸ் சீரிஸ்
Forgotton Love – நெட்பிளிக்ஸ்
தும்சே நா ஹோ பயேகா – ஹாட் ஸ்டார்
சார்லி சோப்ரா – சோனி லவ் சீரிஸ்
Angshuman MBA – ஜீ5
தி டெவில்ஸ் பிளான் – நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்
அவலக்கி பவளக்கி – சினி பசார்
கொரோனா தவான் – பிளே
கிராந்திவீரா – சினி பசார்
கொரோனா தவான் – சைனா பிளே
ஹாஸ்டல் டேஸ் S4 – ப்ரைம் சீரிஸ்
சாக்ஷியும் சந்தகுந்தலாவும் – சிம்ப்ளி சவுத்