விக்னேஷ் சிவன் செய்த மோசமான வேலையால் “25 கோடி” குளோஸ்.? கோபத்தில் இருக்கும் நயன்தாரா..

vikki and nayanthara
vikki and nayanthara

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகள் வளம் வரும் நயன்தாரா மற்றும் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆறு ஏழு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர்.

மேலும் இவர்களது கல்யாணம் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது அதனால் சமூக வலைதளங்களில் இவர்கள் புகைப்படம் வெளியாகாமல் இருந்தது ஆனால் விக்னேஷ் சிவன் மட்டும் அப்போது நயன்தாராவிற்கு தாலி கட்டிய ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருந்தார். அதற்கு காரணம் இவர்களது திருமணத்தை படமாக்கி வெளியிடுவதற்கு அதிக தொகை கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.

புக் செய்து இருந்தது. அதனால் திருமண புகைப்படங்கள் வெளியாகாமல் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் பார்த்து வந்தனர். திருமணம் முடிந்த பிறகு விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் ஹனிமூனுக்கெல்லாம் சென்று வந்து தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கங்களில் திருமண புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் ரஜினி, ஷாருக்கான், ஏ ஆர் ரகுமான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி போற்ற பலரும் இருந்தனர். இப்படி விக்னேஷ் சிவன் திருமணத்தில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதால் அது அந்த ஓடிடி நிறுவனத்தை தற்போது கோபப்படுத்தி உள்ளதாம். அந்த நெட்லிக்ஸ் நிறுவனத்தின் அனுமதி இன்றி விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால்..

ஏற்கனவே இருவரும் பேசி இருந்த ஒப்பந்தம் ரத்து செய்ய odidi நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம். விக்னேஷ் இவன் செய்த இந்த செயலால் ஓடிடி நிறுவனத்திடம் பேசி இருந்த மொத்த பணமும் வீணா போய்விடுமோ என்று பதட்டத்தில் இருக்கிறாராம் நயன்தாரா.