Sundar C: இயக்குனர் கே திருஞானம் எழுதி, இயக்கி வரும் ஒன் 2 ஒன் படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றவர்கள் இணைந்து நடித்த இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு அனுராக் காஷ்யப் ஒன் 2 ஒன் படத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 24 IIRS புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும் கடும் ஆக்ரோசத்துடன் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் பெற்றிருக்கும் இந்த போஸ்டர் லுக் பயங்கரமாக உள்ளது. எனவே இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது. ஒரு குழந்தைக்கும் பாசமான தந்தையாகவும் மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இவருக்கு இணையாக இந்த படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து பரமபதம் விளையாட்டு படத்தின் மூலம் பிரபலமான விஜய் வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ் கான் ஆகியோர்களும் நடித்துள்ளனர். தற்பொழுது ஒன் 2 ஒன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு எஸ்.கே ஏ பூபதி, கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் படத்தொகுப்பு சி.எஸ் பிரேம்குமார் கலை இயக்கம் ஆர் ஜனார்த்தனன் போன்றவர்கள் பணியாற்றியுள்ளனர்.