Rajini : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது. அதனால் வசூலிலும் எந்த குறையும் இல்லை தமிழகத்தையும் தாண்டி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை மட்டுமே 375 கோடி மேல் வசூலித்து இருப்பதாக தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக கூறியுள்ளது. ஜெயிலர் படம் ஒரு வித்தியாசமான கதைக்களம் அதற்கு ஏற்றார் போல ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரௌடிசம், யோகி பாபுவின் காமெடி மற்றும் மோகன்லால், சிவ ராஜ்குமாரின் சீன்கள் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கியது.
இந்த நிலையில் சிவராஜ் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசி பலரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளார் அவர் சொன்னது.. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டு வருகிறது ரஜினிகாந்த் உங்களுக்கு போன் போட்டாரா என தொகுப்பாளர் கேட்க..
ரஜினி அவுட் ஆப் தி ஸ்டேஷன் என இமயமலைக்கு போய் இருப்பதை குறிப்பிட்டார். சென்னைக்கு வந்ததும் முதலாக சூப்பர் ஸ்டாரை பார்க்க தான் சென்னையிலேயே தங்கி இருக்கிறேன் என பதிலளித்தார் மேலும் பேசி அவர் கன்னடா தலை உலகின் பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்த சம்பவம்..
ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிகள் ஆழ்த்தியது அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைய உதவிகள் செய்துள்ளார் அதையெல்லாம் எப்பவும் மறக்க மாட்டோம் என நன்றி உடன் சிவராஜ் குமார் பேசியது வைரலாகி வருகிறது.