22 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை மிஸ் செய்த மஞ்சு வாரியர்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைந்துள்ளார். துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இதனை அடுத்து ஒரே தினத்தில் துணிவு மற்றும் விஜயின் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வந்தார்கள். அந்த வகையில் இதுவரையிலும் இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ரசிகர்கள் தொடர்ந்து தெரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்களின் கனவை நிறைவேற்றியது என்று தான் கூற வேண்டும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் நடித்திருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். முதன்முறையாக அஜித் மற்றும் அஞ்சு வாரியார் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகி இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் மஞ்சு வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை மஞ்சு வாரியர் தவறவிட்டு உள்ளார் அது குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

இந்த திரைப்படம் கடந்த 2000ஆம் ஆண்டு ராஜூ மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களின் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் தன்னைத்தான் இயக்குனர் ராஜு மேனன் அனுகியதாகவும் ஆனால் அப்பொழுது நான் மலையாள படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தின் நடிக்க முடியவில்லை என்றும் நான் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டும் என்றும் மஞ்சு வாரியார் குறிப்பிட்டுள்ளார்.