விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. முல்லையின் வளைய காப்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் என தனம் காத்திருந்த நிலையில் அது தற்பொழுது நடக்காமல் போய் உள்ளது.
இருந்தாலும் ஜீவா-மீனா, கண்ணன்- ஐஸ்வர்யா என அனைவரும் குடும்பத்துடன் வந்தது தனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவா வீட்டிற்கு கிளம்புவதாக கூறுகிறார். எனவே அனைவரிடமும் போயிட்டு வருவதாக கூற பிறகு தனம் கூப்பிட்டு நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும் என சொல்லிவிட்டு அழுகிறார்.
அதற்கு முல்லையின் அம்மா கொழுந்தனா வந்தா அழுவுற போன அழுவுற எதுக்கெடுத்தாலும் அழுவுற முல்லைக்கு ஒரு நல்ல காரியம் நடக்கிறது உனக்கு பொறுக்கலையா எனக்கூறி கஷ்டப்படுத்துகிறார். இதனைக் கேட்ட தனத்தின் அம்மா இப்பொழுது அவள் என்ன சொல்லிட்டு போனா நான் போய் அவளை கேட்கிற எனக் கூற அதற்கு தனம் வேண்டாம் என சொல்கிறார்.
இவ்வாறு இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மல்லிகா முல்லைக்கு வளைய காப்பு வைக்க பிரசவம் பார்க்க நாங்க இருக்கிறோம் ஐஸ்வர்யாவுக்கு யாரு வைப்பா ஏன் அத்தாட்சி நீங்க வைப்பீங்களா என கேட்கிறார் அதற்கு கஸ்தூரி நம்மளாலலா முடியாது என கூறிவிடுகிறார்.
பிறகு தனம் நாங்க ஐஸ்வர்யாவுக்கு வளைய காப்பு வச்சு பிரசவத்தை பார்த்துப்போம் எனக் கூற அதற்கு ஐஸ்வர்யா யாரும் பாவம் பார்க்கலாம் செய்ய வேண்டாம் என தனத்தை கஷ்டப்படுத்துகிறார். இவ்வாறு நல்லது நினைக்கும் தனத்தை மாறி மாறி அனைவரும் கஷ்டப்படத்தை இதனை எல்லாம் தெரிந்துக் கொண்ட தனத்தின் அம்மா மூர்த்தியிடம் உங்களுக்காக தான் நிறைய கஷ்டப்படுத்தி விட்டா இனிமேல்லாசம் நல்லபடியா பார்த்துக்கொள்ளுங்கள் என அழுது கொண்டே வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து கதிர்-முல்லை என அனைவரும் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது முல்லையின் அம்மா வளைய காப்பு முடிஞ்சா எல்லாம் அம்மா வீட்டுக்கு வருவாங்க நீ என்னனா முடியாதுன்னு சொல்ற எனக் கூறிய அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.