பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்க போய் ஏமாந்த விக்ரம், ஜெயராம்.? வைரலாகும் செல்பி புகைப்படம்

ponniyin-selvan-

பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் சில மாதங்கள் கழித்து ஒரு வழியாக இன்று காலை திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீசானது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனம  கிடைத்ததை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், முக்கிய பிரபலங்களும் இந்த படத்தை பார்க்க தற்பொழுது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் 2d மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஒரு பக்கம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக  ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க  சினிமா பிரபலங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் விக்ரம், ஜெயராம் போன்றவர்கள் சென்னையில் உள்ள வடபழனியில் உள்ள palazzo திரையரங்கிற்கு சென்று இருந்தனர் பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் ஷோவில் விக்ரம், ஜெயராம் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் உள்ளே சென்று அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது ஐமேக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தை திரையிட முடியவில்லை இதனால் விக்ரம் மற்றும் ஜெயராம் உட்பட அனைவரும் வந்து விட்டோம் படத்தையாவது பார்த்துவிட்டு செல்லலாம் என சாதாரண திரையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துள்ளனர்.

பொன்னியின் படத்தை ரசிகர்களுடன் ரசிகராக விக்ரம்  அமர்ந்து பார்த்தார். மேலும் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் இதேபோல நடிகர் ஜெயராம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அந்த புகைப்படங்கள் அனைத்துமே தற்பொழுது ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ponniyin selvan
ponniyin selvan
ponniyin selvan