எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றிய ஐஸ்வர்யாவின் சித்தி.! கதிரையும் நம்பாத மூர்த்தி..

pandiyan stores
pandiyan stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரில்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 4 அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் குடும்பமே சுக்கு நூறாக உடைந்து உள்ளது.

அதாவது கண்ணன் செய்த தவறால் அனைத்தும் தலைகீழாக மாறி இருக்கும் நிலையில் ஜீவா தன்னுடைய மாமனார் வீட்டில் வங்கி வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவின் வீட்டில் இருந்து வரும் நிலையில் தனியாக இருப்பதை ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் ரசித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவின் சித்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்று கண்ணனுக்கு அவனுடைய சொத்தை தருமாறு கேட்கிறார். எனவே இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர் மேலும் அவர் இதனைப் பற்றி கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கூற தேவையில்லாம உங்களை யார் இப்படி கேட்க சொன்னது நான் அந்த வீட்டில் ஒரு வேலை கூட செய்யவில்லை அண்ணன் தான் என்ன படிக்க வச்சு வேலைக்கு போக உதவுனது என கூறி திட்டுகின்றனர்.

உடனே கதிர் கண்ணனை பார்ப்பதற்காக வீட்டிற்கு வர பிறகு கண்ணன் இதுபோன்று பங்கு கேட்கவில்லை என கூறுகிறார் மேலும் வீட்டிற்கு வந்து மீண்டும் இணைந்து வாழலாம் என கூற அதற்கு ஐஸ்வர்யா அதெல்லாம் இனி மேல் நடக்காது என சொல்லி விடுகிறார். இதனை அடுத்து வீட்டிற்கு கதிர் செல்ல அங்கு பாண்டியன் ஹோட்டலில் இருந்து வந்த பணத்தை மூர்த்தி, தனத்திடம் கொடுக்கிறார்.

அதற்கு மூர்த்தி மீண்டும் கதிரிடம் இந்த பணத்தை கொடுத்து விடு முல்லை கதிருக்கு செலவு இருக்கும் எனக் கூற பிறகு இவனும் மத்தவங்க மாதிரி எனக்கு பணம் தரேன்னு சண்டை போட்டுட்டு போயிட்டானா என்ன பண்றது என கூற அதற்கு அப்படியெல்லாம் கிடையாது என முல்லை, கதிர் சமாதானப்படுத்த மறுபுறம் கயல் பாப்பா ரைம்ஸ் சொல்ல ஜீவா, ஜகார்த்தனன், மீனா என அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.