எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் இதுதான்.. நடிகரின் வாரிசு குறித்து பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார்

varalaxmi-
varalaxmi-

போடா போடி என்னும் திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை வரலட்சுமி. அதன் பிறகு திரை உலகில் ஹீரோயின்னாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் மற்றும் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இதனால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தற்போது தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது திரை உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி  ஓடிக்கொண்டிருக்கும் வரலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒன்றாக உங்களுக்கும் சுருதிஹாசனுக்கும் இடையே என்ன பிரச்சனை என தொகுப்பாளர் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்தார்.

நானும் சுருதியும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளியில் படித்தோம் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் ஒரே கேங் என்றும் அதே சமயம் நாங்கள்  நெருக்கமான தோழிகள் கிடையாது ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு மனஸ்தாபமும் ஏற்படவில்லை எனவும்..

இதுபோக தாங்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்து உள்ளோம், எதற்கு இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை என கூறினார் தொடர்ந்து பேசிய அவர் தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது மாதிரியான பேச்சு எங்கிருந்து வந்தது என்று தனக்கே தெரியவில்லை எனவும் மேலும் பொதுவாக நான் சோசியல்..

மீடியாவில் ஆக்டிவாக இருப்பதாக தன்னைப் பற்றி வரும் ரூமருக்கு செவிசாய்ப்பது கிடையாது என வெளிப்படையாக கூறியுள்ளார். இதுவரை எந்த ஒரு ரூமருக்கும் இடம் கொடுக்கும் அளவிற்கு நடந்து கொண்டதும் இல்லை எனவும் தன்னை பற்றியும் தனது சக நடிகை சுருதிஹாசன் பற்றியும் உள்ள கேள்விகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை வரலட்சுமி.