நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.! ஏ ஆர் ரகுமானை மிஞ்சிய பிரபலம்

aniruth-
aniruth-

திரை உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க என்னதான் நடிகர், நடிகைகள் தனது திறமைகளை வெளிப்படுத்தினாலும் படத்துக்கு முக்கிய பங்கு வசிப்பது பாடல்கள் மற்றும் பேக்ரவுண்ட் இசை தான்.. இதனால் இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் பட்சத்தில் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர் அப்படி ஹீரோகளுக்கு நிகராக சம்பளம் வாங்கும் 5 இசையமைப்பாளரை பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

1. கீரவாணி : தெலுங்கில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் மகதீரா, பாகுபலி, RRR போன்ற படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர். இவருடைய  இசை தான் இந்த படங்களுக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இவர் RRR படத்துக்காக சுமார் 16 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

2. ஏ ஆர் ரகுமான்  : இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் இசை புயல் ஏ ஆர் ரகுமான்.  ஆஸ்கார் என பல விருதுகளை பெற்று இருக்கிறார். இவர் பாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை டாப் ஹீரோ படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்பொழுது இவர் ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி சம்பளம் வாங்கிய வருகிறார்.

3. தேவி ஸ்ரீ பிரசாத் : ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் பணி வந்த இவர் தற்பொழுது தெலுங்கு சினிமாவே போதும் என கிடைக்கிறார் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக இசையமைத்த புஷ்பா படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா, saami saami போன்ற பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி முதல் சம்பளம் வாங்குகிறார்.

3. அனிருத் : தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையும் பல டாப் ஹீரோ படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் படத்தில் இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் சின்ன குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை கொண்டாடும் வகையில் தான் இருந்து வந்துள்ளன. அனிருத் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்கிறது. இவர் கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலத்திற்கு இசையமைத்ததற்காக சுமார் 6 கோடி சம்பளம் வாங்கினார்.

5. தமன் : பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான தமன். பின் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடைசியாக தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்தார் இந்த படத்திற்காக அவர் 4 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.