பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் டாப் 10 திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக இருப்பார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களை இங்கே பட்டியலிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்டில் அரண்மனை 4, ஸ்டார், டிமான்டி காலனி, கருடன், பிடி சார், லப்பர் பந்து, ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியது அது மட்டும் இல்லாமல் மக்களிடம் நல்ல விமர்சனங்களையும் எடுத்தது.
அதேபோல் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களான விஜயின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன், ரஜினியின் வேட்டையன் தனுஷின் ராயன், விஜய் சேதுபதியின் மகாராஜா, ஆகிய திரைப்படங்களும் வசூலில் நல்ல வேட்டை நடத்தியது அப்படி தான் கடந்த ஆண்டு வசூல் நிலவரங்களை இந்த ஆண்டு படங்களின் வசூல் நிலவரங்களில் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவு என திரை வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்களை இங்கே காணலாம்.
விஜயின் கோட்- 448 கோடி, சிவகார்த்திகேயனின் அமரன்- 340 கோடி, ரஜினியின் வேட்டையன்- 265 கோடி, விஜய் சேதுபதியின் மகாராஜா 178 கோடி, தனுஷின் ராயன் 155 கோடி, கமலின் இந்தியன் 2 150 கோடி, சூர்யாவின் கங்குவா 120 கோடி, சுந்தர் சி யின் அரண்மனை 4 105 கோடி, தங்களான் 80 கோடி, டிமான்டி காலனி 60 கோடி, என முதல் 10 திரைப்படங்கள் லிஸ்ட் இதுதான் என தற்போது தெரியவந்துள்ளது.