2024 இல் ஜனவரி To ஜூன் வரை அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்..!

2024 ஆம் ஆண்டு முதல் பாதி முடிந்துவிட்ட நிலையில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் லிஸ்ட்டை இங்கே காணலாம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து பல திரைப்படங்கள் வெளியானாலும் அதிலும் முக்கியமாக பார்க்கப்படும் திரைப்படம் என்றால் ஜூன் 27ஆம் தேதி வெளியான கல்கி 2898 ஏ டி திரைப்படம் தான் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ஆட்டத்தையே மாற்றி அமைத்துள்ளது. கல்கி திரைப்படம் முதல் பாதியில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது அது மட்டும் இல்லாமல் ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் திரைப்படத்தின் வசூலை விட கல்கி திரைப்படத்தின் வசூல் மூன்று மடங்குக்கு மேல் அதிகம் அதே போல் இந்த வருடத்தின் முதல் பாதியில் அதிக வசூல் செய்த திரைப்படத்தின் லிஸ்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

அதேபோல் இரண்டாவது இடத்தில் ஹ்ரிதிக் ரோஷனின் ஃபைட்டர் திரைப்படம் 243 கோடி பெற்றுள்ளது. அதேபோல் மூன்றாவது இடத்தில் 240 கோடி வரை வசூல் செய்து ஹனுமான் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் ஷைத்தான் திரைப்படம் 178 கோடி வரை வசூல் செய்துள்ளது. 170 கோடி வசூலுடன் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளியாகிய குண்டூர் காரம் திரைப்படம் 142 கோடி வசூல் செய்து ஆறாவது இடத்திலும், காட்சிலா எக்ஸ் காங் தி நியூ எம்பயர் 136 கோடி வசூலுடன் ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் முஞ்சியா என்ற ஹிந்தி திரைப்படமும். ஒன்பதாவது இடத்தில் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகிய ஆடு ஜீவிதம் 104 கோடியும் பத்தாவது இடத்தில் பகத் பாஸில் நடிப்பில் வெளியாகிய ஆவேஷம் 101 கோடி வசூல் செய்து கடைசி இடத்தை பிடித்துள்ளது.

2023 இல் முதல் பாதியில் வெளியாகிய பதான் திரைப்படத்தின் வசூலை இந்த ஆண்டு எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை.