2024 ஆம் வருடத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம் அதாவது ஜூலைக்கு முன்பு ஒரு பாதியும் ஜூலைக்கு பின்பு மற்றொரு பாதியும் அந்த வகையில் முதல் ஆறு மாதங்களுக்கு எந்த ஒரு பெரிய நடிகர்களும் திரைப்படமும் தமிழில் வெளியாகவில்லை.
அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் தான் முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் பெரிய நட்சத்திரங்களில் முதன் முதலில் வெளியானது இந்தியன் 2 அடுத்ததாக பல திரைப்படங்கள் வெளியாகியது அந்த வகையில் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்ற திரைப்படங்களை இங்கே காணலாம்.
முதலிடத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய கோட் திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் பிரபுதேவா ஜெயராம் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதேபோல் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 126 கோடி வரை வசூல் செய்ததாம். திரையரங்கில் ஓடியவரை சுமார் 455 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் வேட்டையன் இந்த திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியானது இந்த திரைப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி அபிராமி உள்ளிட்டவர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 69 கோடி ரூபாய் வசூல் செய்ததாம்.
அதேபோல் மூன்றாவது இடத்தில் கங்கு வா சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 58 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
நான்காவது இடத்தை சிவகார்த்திகேயனின் அமரான் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் முதல் நாளிலேயே 42 கோடி ரூபாய் வசூல் செய்வதாக கூறப்படுகிறது இதுவரை சுமார் 275 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியாகிய ராயன் திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது ராயன் திரைப்படம் சுமார் 65 முதல் 70 கோடி வரை பட்ஜெட்டில் தயாரானது இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 32 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஒட்டுமொத்தமாக 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.