2023 – ல் வெளிவந்த தமிழ் படங்களில் முதல் நாளில் உலகளவில் அதிக வசூல் செய்த 5 படங்கள் குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்..
1. வாத்தி : திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் கைகோர்த்து நடித்த இந்த திரைப்படம் 2023 பிப்ரவரி 17ஆம் தேதி கோலாகலமாக வெளியானது படத்தில் தனுஷ் உடன் இணைந்து இளவரசு, ஆடுகளம் நரேன், சமுத்திரகனி, சாய்குமார், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க பள்ளி சம்பந்தப்பட்டதாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று ஒட்டுமொத்தமாக 100 கோடிக்கு மேல் அள்ளியது. முதல் நாள் உலக அளவில் 14.40 கோடி வசூல் செய்தது.
2. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் நடித்த திரைப்படம் துணிவு. பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக சொல்லியது இதனால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியது படம் ஒட்டுமொத்தமாக சுமார் 240 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 39.60 கோடி வசூல் செய்தது.
3. விஜய் வம்சி உடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டமாக இருந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 47.20 கோடி வசூல் செய்தது.
4. உண்மை மற்றும் நாவல் கதைகளை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம். இவர் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தார் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியானது படத்தில் விக்ரம், பிரபு, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு என பல முன்னணி நடிகர். நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளியாகி ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் 54.02 கோடி வசூல் செய்தது.
5. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி, விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 91.20 கோடி வசூல் செய்துள்ளது.