2023 tamil best collection movie : பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஹாலிவுட் சினிமா தான் அதிக வசூல் ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா அதிக வசூல் திரைப்படங்களின் மூலம் நடக்கும், ஆனால் சமீப காலமாக கனடா சினிமா கூட ஆயிரம் கோடி வசூலை மிக எளிதாக எட்டி விடுகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் அதிக வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த வருடம் பொங்கலில் இருந்து தமிழ் சினிமா வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது அப்படி பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் 300 கோடியும் துணிவு திரைப்படம் 200 கோடியும் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
2023 : இரண்டாவது நாளில் பெத்த வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. சூப்பர் ஸ்டாரிடமும் அடிபணிந்த விஜய்
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்தது ஆனால் இந்த திரைப்படம் 500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 300 கோடி மட்டுமே வசூல் செய்து இருந்தது. 200 கோடி ஏமாற்றத்தை கொடுத்தது.
அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியாகிய வாத்தி திரைப்படமும் விஷால் நடிப்பில் வெளியாகிய மார்க் ஆண்டனி திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதேபோல் 50 கோடி வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்டில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய மாமன்னன் திரைப்படம் 70 கோடியும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியிய மாவீரன் 80 கோடியும் வசூல் செய்திருந்தது.
அதேபோல் சமீபத்தில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது இந்த திரைப்படத்தில் ரஜினி மிரட்டி இருந்தார் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய லியோ திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார், இந்த திரைப்படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
அப்படி இருக்கும் வகையில் தமிழ் சினிமாவில் வெறும் ஒன்பது திரைப்படங்களில் 2000 கோடிக்கு மேல் 2023 ல் வசூல் செய்துள்ளது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் சோலோவாக ஒரு திரைப்படம் ஆயிரம் கோடியை வசூல் செய்யவில்லை என ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் கன்னட சினிமா கூட ஆயிரம் கோடி சோலோ திரைப்படம் பெற்றுவிட்டது ஆனால் தமிழ் சினிமா இதுவரை சோலோவாக ஆயிரம் கோடியை வசூல் செய்யவில்லை ஆனால் 2024ல் அதனை எதிர்பார்க்கலாம் என நம்பிக்கையில் இருக்கிறார்கள்.