2023-september month tamil movie release : 2023 ஆம் ஆண்டு சினிமா நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது கடைசியாக கூட ரஜினி நடிப்பில் உருவான “ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்து சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் பல்வேறு டாப் நடிகரின் படங்கள் வெளிவர இருக்கின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
குஷி : சமந்தா, விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தை ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார்.
கிக் : டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரசாத் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு படமாக உருவாகியுள்ளது படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா ஹோப், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லக்கி மேன் : ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை அள்ளி உள்ள யோகி பாபு. இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லக்கி மேன் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. யோகி பாபு உடன் இணைந்து வீரா, ரேச்சல் ரெபக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படம் நகைச்சுவை மற்றும் குடும்ப கலந்த படமாக உருவாகியுள்ளது.
துடிக்கும் கரங்கள் : ஆரம்பத்தில் கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்ட விமல் சமீபகாலமாக வெற்றிக்கு போராடி வருகிறார் தற்பொழுது வேலுதாஸ் இயக்கத்தில் விமல், மிஷா நரங் கூட்டணியில் உருவாகி உள்ளது இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக எதிர்பார்க்கப்படுகிறது.
பரம்பொருள் : போர் தொழில் படத்தை தொடர்ந்து சரத்குமார் போலீசாக நடித்துள்ள திரைப்படம் பரம்பொருள் இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது படத்திருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கருமேகங்கள் கலைகின்றன : சிறந்த இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ள தங்கர்பச்சான் சிறு இடைவேளைக்கு பிறகு மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, ராதா ரவி, யோகி பாபு என பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.
ரங்கோலி : இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளை படமாக எடுத்து உள்ளார்.
மார்க் ஆண்டனி : பஹீரா படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் படமாக உருவாகி உள்ளது படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்திரமுகி 2 : சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பி வாசு பல வருடங்கள் கழித்து சந்திரமுகி 2 படத்தை எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ், லஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார் என பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
ஜவான் : பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக வந்துள்ளது ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர்.
சலார் : கே ஜி எஃப் 2 படத்தை தொடர்ந்து பிரசாந் நீல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார் இந்த படமும் கேஜிஎப் மாதிரி உருவாகியுள்ளது.
தமிழ் குடிமகன் : திரு இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சேரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் பல திறமையான நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.