2023 -ல் மாபெரும் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. அஜித், ரஜினிக்கு தண்ணி காட்டிய நடிகர்

Jailer
Jailer

2023 -ல் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரிய வசூலை அள்ளி உள்ளது.. வசூலில்  முதல் 5 இடங்களில் இருக்கும் படங்களைப் பற்றி பார்ப்போம்..

துணிவு : அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. படம் அதிரடி ஆக்சன் மற்றும் சமூக கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் படம் சென்றடைந்தது இதனால் அதிக நாட்கள் ஓடி 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

வீட்டிற்க்கே வந்து ஜனனி தான் என் எதிரி எனக் கூறும் பிரபலம்.! குணசேகரனுக்கு குட்டு வைத்த கதிரின் மகள்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

வாரிசு : துணிவு படத்துடன் மோதியது விஜயின் வாரிசு படம்.. படம் முழுக்க முழுக்க அண்ணன் தம்பி மற்றும் குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளியது.

பொன்னியின் செல்வன் 2 : உண்மை மற்றும் நாவல் கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இரண்டாவது பாகம் சில மாதங்களிலேயே வெளியானது. இந்தப் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 350 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

தோல்வியிலிருந்து மீண்டு வந்த பிரபாஸ்.. சலார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். வழக்கமான அப்பா – மகன் பாசத்தை எடுத்துரைக்கும் படமாக இருந்தாலும் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்தது அதனால் அதிக நாட்கள் ஓடி 615 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

லியோ : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் லியோ.. ஒரு போதை பொருள் கும்பல் லியோ தான் பார்த்திபன் என  துரத்துகிறது அதிலிருந்து  பார்த்திபன் என்கின்ற விஜய் எப்படி மீண்டும் வருகிறார் என்பதுதான் கதை படம் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று படம் ஓடியது ஒட்டுமொத்தமாக சுமார் 650 கோடி வசூல் செய்ததாக சொல்லபடுகிறது.