ஏன் லிஸ்ட்ல இதுதான் நல்ல படம்.. 2023ல் குட் மூவிஸ், அவரேஜ் மூவிஸ், ஜஸ்ட் மிஸ் என பிரிச்சி மேய்ஞ்ச ப்ளூ சட்டை மாறன்..

blue sattai maran
blue sattai maran

Blue Sattai Maran: 2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி உள்ளனர். இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளது அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் முதல் குறைந்த பட்ஜெட்டில் உருவான அறிமுக நடிகர்களின் படங்கள் வரையிலும் மாஸ் காட்டியது.

அப்படி இளம் நடிகர்களின் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான டாடா, குட் நைட் போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதனை அடுத்து விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படமாக விளங்குகிறது.

மீனாவை பர்மனென்ட் வேலைக்காரி ஆக்கிய ஸ்ருதி.. கோபத்தில் முத்து – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..

இதனை அடுத்து அயோத்தி, போர் தொழில், விடுதலைப் போன்ற திரைப்படங்களும் சிறந்த கதை களத்தோடு ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு 2023ஆம் ஆண்டில் தமிழில் ஏராளமான படங்கள் வெளியான நிலையில் சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை ப்ளூ சட்டை மாறன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2023 இனிதே முடிந்தது என்று தன்னுடைய பதிவை துவங்கி அதில் இந்த ஆண்டில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் இதில் சில திரைப்படங்கள் நல்ல படங்களாக வெளியாகியதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று தொலைக்காட்சியில் போட்டாலும் டிஆர்பி எகிறும்.. மறக்க முடியாத விஜயகாந்தின் 10 திரைப்படங்கள்..

அதன்படி, Good Movie List என்ற டைட்டிலுடன் டாடா, அயோத்தி, விடுதலை, போர் தொழில், கூழாங்கல், முனுசாமி வீரப்பன் சீரிஸ் என தெரிவித்துள்ளார். மேலும் Average Movies List என்ற டைட்டிலுடன் அயலி சீரிஸ், கொன்றால் பாவம், யாத்திரை, பர்ஹானா, குட் நைட், தீரா காதல், பம்பரம், சத்திய சோதனை, டிடி ரிட்டன்ஸ், அடியே, மிஸ் ஷெட்டி, மார்க் ஆண்டனி, சித்தா, 800, டைகர் 3, செவ்வாய் கிழமை, ஏழு கடல் தாண்டி சைட் பி, ஜோ, பார்க்கிங், ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜஸ்ட் மிஸ் லிஸ்டாக மாமன்னன், மாவீரன், டைனோசர்ஸ், பரப்பொருள் போன்ற படங்களையும் தெரிவித்துள்ளார். இந்த படங்கள் லிஸ்டில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ திரைப்படங்களை தவிர்த்து உள்ளார்.