2023 : ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்.! ஓர் பார்ப்பவை

Jailer
Jailer

Jailer : இந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் திரையரங்குகளில் நல்ல விமர்சனத்தை பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது 14 நாட்கள் முடிவில் மட்டுமே சுமார் 550 கோடி வசூல் செய்துள்ளது இந்த படத்தின் வசூலை முறியடிக்க தமிழ் சினிமாவில் அடுத்து வர இருக்க இந்த படங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1.  லியோ : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 18 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது இதுவரை இந்த படத்தில் இருந்து கிடைத்த தகவல் என்னவென்றால் படத்தில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம்.

ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் படம் சற்று வித்தியாசமான படம் என்றும் பலரும் கூறி வருகின்றனர் இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது ரிலீஸுக்கு முன்பே பல கோடி அள்ளி வருவதாக கூறப்படுகிறது.

2. கங்குவா : வணங்கான் படம் ட்ராப் ஆனாதை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் தான் இது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு காடு, மலை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. பழைய வரலாற்று சம்பந்தமான ஒரு படமாக உருவாகி வருகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது படம் வெளிவந்து 500 கோடிக்கு மேல் அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

3. இந்தியன் 2 : இந்தியன் படம் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் கமலஹாசன் 90 வயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் இணைந்து பாபி சிம்ஹா, சித்தார்த்..

காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங்  என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்து காணப்படுகிறது. வெளிவந்து ஜெயிலர் படத்தின் சாதனையை அனைத்தையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. விடாமுயற்சி : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் விடாமுயற்சி.  இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டாலும்  அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லை ஆனால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கின்றனர் அப்டேட் கேட்டு வருகின்றனர் இந்த படம் வெளிவந்தால் நிச்சயம் பல சாதனைகளை முறியடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..