சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் எல்லாம் கிடையாது படம் நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் அந்த படம் பெரிய வசூல் வேட்டையாடும். அப்படி 2023 குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி பெரிய வசூலை அள்ளிய 5 படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
டாடா : கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான திரைப்படம் டாடா. படத்தில் அபர்ணாதாஸ், பிரதீப் ஆண்டனி, ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ் குமார் என பலர் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் காதல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது 4 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அஜித் BLACK MONEY வாங்க மாட்டாரு.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்.!
டிடி ரிட்டன்ஸ் : சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியானது படத்தில் மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, விஜயன், பாஸ்கர் தீனா, மாறன், கூல் சுரேஷ், சுரபி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் உருவான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சுமார் 31 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய வசூல் வேட்டையாடியது.
போர் தொழில் : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பது தான் கதை அவன் தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகளை செய்து வருகிறான். அவனை பிடிக்க படித்த அசோக் செல்வனம், அனுபவசாலி சரத்குமாரும் தேடி கண்டுபிடிக்கின்றனர் படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது ஒட்டுமொத்தமாக சுமார் 50 கோடி வசூல் செய்தது.
அயோத்தி : மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் preethi asrani, தமன் குமார், புகழ், பிரபு, போஸ் வெங்கட், பாண்டி ரவி, சேத்தன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படத்தின் கதை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படம் பெரிய வசூலை அள்ளியது.
ஜோ : பிக்பாஸ் மற்றும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமையை வெளிக்காட்டிய ரியோ ராஜ் சினிமா உலகில் கால் தடம் பதித்து தற்பொழுது வெற்றி நடை கொண்டு வருகிறார் இவர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜோ. அருண் டி ஜோஸ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் காதல், திருமணம், ஏமாற்றம், பிரிவு என ஒரு ஆணின் வாழ்க்கையை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறது படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை நல்ல வசூலைஅள்ளி உள்ளது.