2023 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால் சமூக வலைதள பக்கங்களில் 2023 -ல் நடந்த சில சிறப்பான சம்பவங்கள் பற்றி பேசி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டில் திரையரங்குகளில் அதிகம் வசூல் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
பொன்னியின் செல்வன் 2 : நாவல் மற்றும் உண்மை கதைகளை எடுப்பதில் ரொம்பவும் கை தேர்ந்தவர் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார். அதன்படி இரண்டாவது பாகம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இந்த ஆண்டில் அதிக கலெக்ஷன் அள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
வாரிசு : வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளிவந்த குடும்ப திரைப்படம் தான் வாரிசு. படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சரத்குமார், பிரபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது படம் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி இருந்தாலும் வசூல் ரீதியாக நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
துணிவு : நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் தன்னுடைய படங்களில் சமூக கருத்துக்களை திணித்து நடித்து வருகிறார் அப்படி துணிவு திரைப்படம் பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளியே காட்டியது படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் அடித்தது இந்த படம் அதிக வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
தமிழிடம் வந்து கண்ணீர் விட்டு அழும் ராகினி.. என்ன முடிவு எடுக்க போகிறார் தமிழரசன்..
ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர் படம் முழுக்க முழுக்க அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து படம் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு விநாயகத்தின் ரவுடிசம் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகியவர்களின் மாஸ் என்ட்ரி என அனைத்தும் பட்டையை கிளப்பியதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரிய வசூலை அள்ளியது. இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
லியோ : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் எமோஷனல் என கலந்து இருந்ததால் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை கொண்டு வந்தாலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்தது அதிக வசூல் அள்ளிய திரைப்படங்கள் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.