திரை உலகில் இருக்கும் பலரும் உச்ச நட்சத்திர நடிகர், நடிகைகள் என்ற அந்தஸ்தை பெற ஆசைப்படுவது வழக்கம். அந்த இடத்தை பிடித்தாலும் அதை தக்கவைத்துக் கொள்ள நடிகர், நடிகைகள் ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் மேலும் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் புகைப்படங்களை வெளியிட வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதை அனைத்தையும் செய்யும் நபர்கள் எப்பொழுதுமே உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்பர் ஒன், நம்பர் 2 இடத்தை பிடித்து அசத்துகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ORMAX நிறுவனம்.. இந்த ஆண்டு இந்திய அளவில் பிரபலமான டாப் 10 நடிகைகள் யார் யார் என்பது குறித்து ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் நடிகைகள் யார் என்பது குறித்து தான் நாம் விலாவாரியாக பார்க்க உள்ளோம்..
1. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.
2. பாலிவுட் டாப் நடிகை ஆலியா பட் இரண்டாவது இடத்தை கைவசப்படுத்தினார். 3. தென்னிந்திய சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வருகிறார் இதனால் இவர் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நடிகைகள் குறித்து பார்ப்போம் காஜல் அகர்வால், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா, கத்ரீனா கைஃப், கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா செட்டி போன்றவர்கள் தான் இந்திய அளவில் பிரபலமான 10 டாப் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.