வருடம் வருடம் கூகுளில் தேடப்பட்ட நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும்.. அதில் கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் இந்த வருடத்தில் விஜய் எத்தனாவது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய்.
இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகினாலும் இந்த படத்தில் மாஸ், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் என கூறப்படுகிறது இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார்.
இவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது இது ஒரு பக்கம் இருக்க..
மறுப்பக்கம் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது வருடம் வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் குறித்து தகவல்கள் வெளியிடுவது உண்டு அந்த வகையில் இந்த வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் சினிமாவில் இருக்கும் 5 பேர் இடம் பிடித்திருக்கின்றனர். தளபதி விஜய் 15 வது இடத்தை பிடித்திருக்கிறார். 45 வது இடத்தை சூர்யா, 46வது இடத்தை தனுஷ் , 68 வது இடத்தில் ரஜினி, 78 வது இடத்தில் அஜித்குமார் இருக்கிறார். போன வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலில் 19வது இடத்தில் இருந்த தளபதி விஜய் சில இடங்கள் முன்னேறி 15 வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.