தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகின்றனர் அந்த வகையில் இந்த வருடத்தில் பல டாப் நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கின்றன. நான்கு வருடங்கள் கழித்து கமல் நடித்த விக்ரம் திரைப்படம் விமர்சனம் ரீதியாக அடித்து நொறுக்கியது.
வசூல் ரீதியாக 420 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்த வலிமை விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த இரண்டு திரைப்படம் 200 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. வலிமை பீஸ்ட் படத்தை தொடர்ந்து கார்த்தியின் விருமன் திரைப்படம்.
ஆரம்பத்தில் நல்ல வசூலை அள்ளினாலும் போகப் போக வசூல் குறைந்தது ஓரளவு பட குழு எதிர்பார்த்த வசூல் வந்தது. நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஒரு கிளாஸ் ஆன படம் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. இப்போ நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்துள்ளது இந்த படத்தில் நடிகர் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு சின்ன பையனாக நடித்துள்ளது இந்த படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.
இந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது மேலும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது முதல் நாளிலேயே உலக அளவில் பத்து கோடிக்கு மேல் அள்ளியது இரண்டாவது நாளிலும் கணிசமான வசூலை அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வருடத்தில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய திரைப்படம்.
எது என்பது குறித்து தகவல்களை உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். வலிமை – 36.17 கோடி, பீஸ்ட் – 26.40 கோடி, விக்ரம் – 20.61 கோடி, எதற்கும் துணிந்தவன் – 15.21 கோடி, திருச்சிற்றம்பலம் – 9.52 கோடி, டான் – 9.47 கோடி, கோப்ரா – 9.28 கோடி, விருமன் – 7.21கோடி, வெந்து தணிந்தது காடு – 6.85 கோடி.