2022 – Google லில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்.! லிஸ்ட் இதோ..

tamil-movies-
tamil-movies-

2022 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் நடந்து வருவதால் இந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் சிறந்த நடிகர் நடிகைகள் காமெடியன்கள் போன்ற கணக்கெடுப்பு எடுக்கப்படும் அந்த வகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் விவரம் வெளியாகி உள்ளது. அதில் டாப் 10 படங்களை பற்றி பார்ப்போம்.

1. விக்ரம் : இந்த படம் கமல் நடிப்பில் சில வருடங்கள் கழித்து வெளி வந்ததால் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது அதோடு மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருந்தார் படம் நல்ல வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. 2. பொன்னியின் செல்வன் : இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதன் முதல் பாகம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

3. பீஸ்ட் : விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. 4. ராக்கெட்ரி : நடிகர் மாதவன் இயக்கி நடித்து வெளிவந்த இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

5. லவ் டுடே : இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி செம வசூல் வேட்டை நடத்திய பிளாக்பஸ்டர் படம். 6. வலிமை : ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படமும் சுமாரான வரவேற்பு பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

7. திருச்சிற்றம்பலம் : ஜவகர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 8. மகான் : நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த மகான் திரைப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

9. கோப்ரா : நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள கோப்ரா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று ஓடியது. 10. விருமன் : இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.