2022 பெரிய பட்ஜெட்டில் உருவாகி நஷ்டமடைந்த10 திரைப்படங்கள்.! அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்த டாப் ஹீரோ

naane-varuven--captan-miller
naane-varuven--captan-miller

நமக்கு எப்படி 2023 நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதே போல சினிமா நடிகர் நடிகைகளும் இந்த ஆண்டில் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது வழக்கம் அந்த வகையில் ஆரம்பத்திலேயே அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த பொங்கல் ரசிகர்களுக்கு திருவிழா போல இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு ஏற்றார் போலவே தொடர்ந்து வாரிசு துணிவு பட குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க மறு பக்கம் கடந்தாண்டில் நடந்த சில சிறப்பான மற்றும் கசப்பான சம்பவங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

டாப் நடிகர்களுக்கு கடந்த ஆண்டு நல்ல ஆண்டாக தான் இருந்து வந்துள்ளது அந்த வகையில் கமலின் விக்ரம் அஜித்தின் வலிமை  பொன்னியின் செல்வன் போன்ற பெரிய பட்ஜெட்டில் வெளியான படங்கள் நல்ல வசூலை அள்ளியது. ஆனால் ஒரு சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

அது குறித்து தான் நாம் தற்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம். 1. விஜயின் – பீஸ்ட்,  2. விக்ரம் – கோப்ரா, 3. சூர்யா – எதற்கும் துணிந்தவன், 4. சிவகார்த்திகேயனின் – பிரின்ஸ், 5. தனுஷின் – நானே வருவேன், 6. சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் நடித்த – தி லெஜன்ட்.

7. விஷாலின் – வீரமே வாகை சூடும், 8. நடிகர் ஆர்யாவின் – கேப்டன், 9.  மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் – டி எஸ் பி, 10. விஷாலின்  – லத்தி. போன்ற படங்கள்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான திரைப்படம் ஆனால் வெளிவந்து நஷ்டம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.