2020 ஆம் ஆண்டு சற்றும் எதிர்பார்க்காமல் உயிரிழந்த தமிழ் சினிமா பிரபலங்கள். இதோ முழு தகவல்

2020-dead-cinema-celebrity
2020-dead-cinema-celebrity

2020 ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகம் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது என்றே கூற வேண்டும் ஏனென்றால் நடிப்பிற்கு பெயர்போன ஜாம்பவான்கள் பலர் உயிர் இழந்து உள்ளதால் சினிமா வட்டாரங்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகின்றனர். அத்தகைய ஜாம்பவான்கள் தனக்கென ஒரு பாதையை தீர்மானித்து அதில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இறந்தால் சினிமா வட்டாரங்களையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் பலர் உயிரிழந்து உள்ளனர் அவர்களை பற்றிய இப்பொழுது பார்க்க உள்ளோம்.

visu
visu

1. விசு

சினிமா துறையில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கியவர் விசு. இவர் தமிழ் திரை உலகில் முதலில் எழுத்தாளராக தனது கால் தடத்தை பதித்தார். அதனை தொடர்ந்து இயக்குநராக ,நடிகராக தன்னை பன்மடங்கு அதிகரித்து கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் இவரது படங்கள் இன்று வரையிலும் மக்களுக்கு ஃபேமஸ் ஆக அமைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே இவர் சினிமாவையும் தாண்டி பட்டிமன்றங்களில் தனது பேச்சின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பல செய்திகளை அறிவுரித்து உள்ளார் சமீபத்தில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் திடீரென இறந்தார். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்ததால் விசா வழங்க முடியாமல் போனதால் அவரது குடும்பங்கள் வரமுடியாமல் போனது. அவரது உற்ற நண்பர்கள் அடக்கம் செய்தனர்.

munniyamma
munniyamma

2. பரவை முனியம்மா

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல் என்றால் நமக்கு உடனே அறிமுகம் ஆனவர் பரவை முனியம்மா. இவர் தூள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் முதல் படத்திலேயே தனது சிறந்த பாடலை பாடிய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு புத்துணர்வு ஊட்டி வந்தார் இந்த நிலையில் அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இச்செய்தியை சினிமா வட்டாரங்களையும்தாண்டி பொதுமக்களை பெரிதும் பாதித்தது இவரது இழப்பு தமிழ் சினிமாவில் ஈடுகட்ட முடியாத ஒன்றாக கூறப்பட்டு வருகிறது.

sethuraman
sethuraman

3. சேதுராமன்.

தமிழில் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சேதுராமன் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக மருத்துவராக பணியாற்றி என்பது குறிப்பிடத்தக்கது இவர் 32 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் இவர் இறப்பதற்கு முன்பாக கொரோனா நடவடிக்கையாக பல டிப்ஸ்களை வழங்கியுள்ளார். சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.

நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் ...

4. கே கே பி கோபாலகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்ட நடிகர்களில் ஒருவர் கே கே பி கோபாலகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரை பிரபலபடுத்தியது நாடோடிகள் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் போன்ற படங்கள் ஆகிய படங்களில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இந்த நிலையில் திடீரெனஉடல் நிலை குறைவு காரணமாக அவர் இறந்தார்.

5. டி எஸ் ராகவேந்திரா

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் திரைஉலகில் பணியாற்றியவர் டி எஸ் ராகவேந்திரா. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது சிறப்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி திரை உலகில் நீண்ட நாட்கள் பயணித்த இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.