2019-ல் மக்களால் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த திரைப்படங்கள்.! லிஸ்ட் இதோ!!

ஆண்டுதோறும் பல படங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வெற்றி தோல்வி அடைகின்றன. இது புதுமுக நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகர்களுக்கும் இதுபோன்று நடந்து உள்ளன. இதுபோன்று 2019 ஆம் ஆண்டு மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த படங்கள் வரிசை இடப்பட்டுள்ளன.

1. சாஹோ படம் மக்கள் மத்தியில் அதிகம் ஏதிர்பார்க்கப்பட்டு வந்தாலும் இப்படம் தோல்வியை சந்தித்தது. ஏனென்றால் இதற்கு முன்பு அவர் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை கொடுத்து இருந்த நிலையில் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெரும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இப்படமோ சரியான கதைகளம் இல்லாதது மற்றும் புதுமுக இயக்குனர்களை கொண்டு எடுக்கப்பட்டதால் இப்படம் பிரபாஸ்க்கு ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை கூகுளில் இந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்டுள்ளது என்பதும் மற்றும் இப்படம் எடுக்க சுமார் 150 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

2. முன்னணி நடிகர்கள் ஹிட் கொடுத்து வந்துள்ள நிலையில் சூர்யா அவர்கள் கடந்த 3 படங்களில் வெற்றி கிடைக்காததால் சற்று கவலையில்  இருந்தார். இந்த நிலையில் அவர் என் ஜி கே படத்தின் மூலம் செல்வராகவுடன் கைகோர்த்தார் நடிகர் சூர்யா இந்த படத்திலாவது ஹிட் அடிப்போமா என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவியது. எதிர்மறை விமர்சனங்களால் இப்படம் தோல்வியை தழுவியது.இது செல்வராகவன்  காம்போ இல்லையென தெரிந்ததால் எதிர்பார்ப்பு குறைந்தது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4.2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஒரு தோல்வி ஆண்டாகவே அமைந்தது. இதற்கு முன்பு சீமராஜா படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்த நிலையில் வெற்றி  கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது இவர் மறுபடியும் ராஜேஷுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி படத்தை பெற்றுக்கொடுக்கும் என மனதில் வைத்து காமெடி கலந்த படத்தில் களமிறங்கினார் சிவகார்த்திகேயன். ஆனால் கதைக்களம் சரி இல்லாததால் படம் தோல்வி படமாக அமைந்தது.படத்தில் கதை கிடையாது வெறும் காட்சிகளை வைத்தே படம் உருவாக்கப்பட்டது என ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் கேலி பண்ணினார்கள்.

5. பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஓவியாவிற்கு 90ml படவாய்ப்பு கிடைத்தது இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபடியும் கால் எடுத்து வைக்கிறோம் என எதிர்பார்த்த ஓவியாவிற்கு இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்விப் படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் விமர்சனரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

மக்கள் இப்படத்தில் பெண் சுதந்திரத்தை பற்றி பேசுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு எதிர்மாறான வசனங்கள் இப்படத்தில் உள்ளடங்கி இருந்தன. படத்தின் மூலம் ஓவியாவுக்கு  பட வாய்ப்பு கிடைக்காது எனவும் ரசிகர் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

6. கண்ணே கலைமானே இப்படம் உதயநிதியின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இப்படத்தின் கதையை  இயக்குனர் பல கோணத்தில் எடுத்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியவில்லை. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் பல கதைகள் என உருவாக்கிய இயக்குனர்.

7. கார்த்திக் அவர்களுக்கு கைதி படம் மாபெரும் ஹிட்டடித்த நிலையில் அதைத் தொடர்ந்து தேவ் படத்தில் அவர் நடித்தார். இப்படத்தில் ரகுல் ஹீரோயினாக நடித்திருந்தார் இதற்கு முன்பு இவர்கள் தீரன் அதிகாரம் படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் எந்த ஒரு காட்சிகளும் கைகொடுக்கவில்லை எனவே இது ஒரு மிகப்பெரிய தோல்வி படமாக கார்த்தி கேரியரில் அமைந்தது.

8. சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படம் பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்து வெற்றி பெற்றிருந்த நிலையில். தமிழ் சினிமாவில் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இப்படம்.  சுவாரசியமாக இல்லாததால் சலசலப்பு ஏற்படுத்தியதாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விமர்சித்தனர்.

இதுபோன்ற 2019ஆண்டு சில படங்கள் தோல்வி அடைந்தன மேலும் சில திரைப்படங்கள் ஐரா,குப்பத்து ராஜா,அயோக்யா,சார்லி சாப்ளின் போன்ற படங்களாகும்.