சுட்டு பிடிக்க உத்தரவு.
இந்தத் திரைப்படம் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படமாகும். விக்ராந்த், சுசீந்திரன், அதுல்யா ரவி இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுட்டு பிடிக்க உத்தரவு திரைப்படத்தில் விக்ராந்த் அவர்கள் தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் சேர்த்தனர் அப்போது அவருக்க அதிக பணம் தேவைப்படுவதால் அவர் திட்டமிட்டு அவருடைய நண்பர்களுடன் ஒரு வங்கியில் போய் கொள்ளையடித்து காரில் ஏறி தப்பிச் செல்கிறார்.
அப்போது ஒரு குப்பத்தில் அவரது வாகனம் விபத்துக்குள்ளாகிறது. அவர்கள் அந்தக் குப்பத்தை சுற்றி வருகிறார்கள் போலீசார்கள் குப்பத்தை சுற்றி வளைத்தனர் அப்போது என்ன நடந்தது என்பது மீதி கதையாகும். இந்த படம் ரசிகர்களின் முன்பு நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெறவில்லை. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கும்.
ஜீவி.
இயக்குனர் வி. ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெளியான அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு புதிதாக அறிமுகமான வெற்றி அவர்கள் படத்தில் நடித்துள்ளார். இவர் 8 தோட்டங்கள் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் வெற்றி அவருடைய நண்பனாக கருணாகரனும் நடித்துள்ளார் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கி ஒரே கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அப்போது பணம் சம்பாதித்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
சரியான படிப்பறிவு இல்லாத காரணத்தால் இவர்கள் ஒரு கடையில் வேலை செய்யும் இவர்கள். எப்படி பணம் சம்பாதிப்பது என்று அறியாமல் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஓனரிடம் நகை திருட முயற்சிக்கிறார்கள். இப்படி இவர்கள் செய்யும் இந்த திருட்டு இவர்களின் வாழ்க்கையை எந்த விதத்தில் பாதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்பதே கதை ஆகும். ஜிவி படம் மக்களிடையேயும் ரசிகர்களுக்கு இடையையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை தழுவியது.
3.கேம் ஓவர்.
டாப்சி பன்னு, வினோதினி வைத்தியநாதன், நடிப்பில் உருவாகி இந்தியாவில் பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு புரோமோஷன் தமிழில் செய்யப்படவில்லை.
இந்தப் படம் திரில்லர் படமாக வெளியாகி ஒருசில ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. டாப்ஸி அவர்கள் ஒரு வீடியோ கேம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அபபோது அவர் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே வீடியோ கேம் உருவாக்கி வருகிறார் அந்த சமயத்தில் புத்தாண்டன்று ஒரு கசப்பான சம்பவம் வேறு நடைபெறுகிறது. அந்த விபத்தில் உயிர் தப்பிய இவர் தற்காலிகமாக வீல் ஜெரில் உட்காரும் நிலைமை ஏற்பட்டது. பின்னர் இருட்டு என்றாலே பயப்படுகிறார். ஒரே நாற்காலியில் அமர்ந்திருந்த டாப்சி
பொழுதுபோக்கிற்கு வீடியோ கேம் விளையாட தொடங்கினார். அப்படி விளையாடும் இவருக்கு திடீரென சில திகில் சம்பவம் நடக்கிறது. அதே தனது கையில் உள்ள ஒரு டாட்டூவாலும் டாப்ஸிக்கு சில பிரச்சனைகள் வருகிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருவார் என்பது இப்படத்தின் கதை.
இந்த படம் திகில் படமாக உள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆனால் வசூல் ரீதியாக இப்படம் தோல்வி அடைந்தது.
பேரன்பு.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான குடும்பத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, இவர்கள் இணைந்து நடித்த படம் பேரன்பு. இந்த படத்தில் மம்மூட்டி அவர்கள் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும்.
ஆனால் அந்த குழந்தை மூளை முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றார்கள். அவருடைய குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்து விட்டாலே என்பதால் அவர் தன் மகளை கூட பார்க்காமல் வெளிநாட்டிலேயே இருந்து விடுகிறார். இந்த நிலையில் மம்மூட்டியின் மனைவியை அந்த குழந்தையை வளர்க்கிறாள்.
ஒரு காலகட்டத்தில் என்னால் அந்தக் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்று வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார். மனைவி பிரிந்து சென்றுவிட மாற்றுத்திறனாளியான அவரது குழந்தை வளர்க வேண்டிய பொறுப்பு மம்மூட்டிக்கு ஏற்படுகிறது. அப்போது சொந்த பந்தங்கள். அக்கம்பக்கத்தினர்கள் பிடுங்கல்களினால் அவரது மகளை அழைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு மாரி போகிறார்.
அங்கு இயற்கையின் அற்புதங்களை காண்கிறார். தன்னை வெறுத்த மகளின் பாசம் கிடைக்கிறது. ஆனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால் நமக்கு உணர்வுகளையும் வாழ்வின் யதார்த்தங்களையும் இந்தப்படம் நம்முள் கடந்து பயணிக்கிறது.இந்த படம் நல்ல கருத்துள்ள படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் தோல்வி அடைந்தது.
சர்வம் தாளமயம்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம். கர்நாடக சங்கீதம் என்பது சமூகத்திற்கு மட்டும் தானா என கேள்வியை முன் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சர்வம் தாளமயம். மிருதங்கம் செய்து விற்கும் ஏழை தொழிலாளி மகன் ஜிவி பிரகாஷ் இவர் கல்லூரியில் படித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு விஜயின் தீவிர ரசிகன். இதன் காரணமாகவே அவனது படிப்பு தடைபடுகிறது. இதற்கிடையே இரவு பகல் பாராமல் வேலை பார்க்கும் சாரா மீது காதல் ஏற்படுகிறது.
ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு இயல்பாகவே மேளம் வாசிக்க வருகிறது. இந்தநிலையில் மிருதங்கம் மீது அவனுக்கு தீராக் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பிறந்த சமூகத்தின் காரணமாக. அவருடைய ஆசை நிராகரிக்கப்படுகிறது. எனவே மிருதங்கம் மீதான காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. ஒரு கலை என்பது தனிப்பட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல என்பதனை அழுத்தமான திரைக்கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும்.
சூப்பர் டீலக்ஸ்.
பிரபல தமிழ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இந்தப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் இவருக்கு திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பின் அவருடைய மனைவியை விட்டு செல்கிறார் பின்பு நீண்ட வருடம் கழித்து தன் மகனைப் பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வருகிறார். விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலை யும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் விஜய்சேதுபதியை நடத்தும் விதம் ஒரு காலகட்டத்தில் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
ஆபாச படம் பார்க்க வேண்டும் என்று ஐந்து சிறுவர்கள் தயாராகின்றனர். அதில் ஒரு சிறுவனின் தாய் ரம்யா கிருஷ்ணன் ஆபாச படத்தில் நாயகியாக தொலைக்காட்சியில் காட்சி தர அதை கண்ட அந்த சிறுவன் கோபத்துடன் தொலைக்காட்சியை உடைத்து விடுகிறான். அதுமட்டுமல்லாமல் தன் அம்மாவை கொள்வதற்கு செல்கிறான். திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர் சமந்தா மற்றும் பகத் பாசில் இதில் சமந்தா தன்னுடைய பழைய காதலனுடன் கள்ள தொடர்பில் இருக்கும் போது அந்த காதலன் இறக்கின்றான். இந்த விஷயம் சமந்தாவின் கணவனுக்கு தெரியவருகிறது.
பின்னர் சமந்தா தன் கணவன் பகத் பாஸில் உதவியுடன் பிணத்தை இணைந்தே அப்புறப்படுத்த நினைக்கும்போது அவர்கள் கடும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த நான்கு கதையில் இவர்கள் எதிர் கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எவ்வாறு மற்றவர்களை சென்று அடைகிறது என்பது இந்தப் படத்தின் கதையாகும்.
ஒத்த செருப்பு சைஸ் 7
ஹாலிவுட் திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படம் தமிழில் ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் பணியாற்றியுள்ளார் பார்திபன் அவர்கள் தமிழ் திரையுலகை ஹாலிவுட் திரை உலகிற்கு நிகராக கொண்டு சென்றுள்ளார். இந்தப் படம் உலகமெங்கும் பல பிரபலங்களால் பாராட்டப்பட்ட படமாகும். ஒரு கொலை குற்றத்திற்காக பார்த்திபன் மற்றும் அவரது நோயால் தாக்கப்பட்ட மகன் இருவரையும் காவல் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர் காவல்துறையினர் ஒரு அறையில் குற்றவாளியாக சந்தேகப்படும் பார்த்திபனை காவல்துறையினர் விசாரணை மேற் கொள்கின்றனர். உண்மையில் பார்த்திபன் கொலை செய்தாரா நடந்தது என்ன என்பது இப்படத்தின் கதை ஆகும். இக்கதையில் எந்த ஒரு துணை நடிகர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க இப்படத்தில் பார்திபன் மட்டுமே நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் வசனங்களில் உருவாகியுள்ளது.
மேலும் சில திரைப்படங்கள் வெள்ளைப்பூக்கள், பக்ரீத், ராட்சசி, உறியடி 2, மெஹந்தி சர்கஸ், காளிதாஸ்.