தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஏழு நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள் ஏனென்றால் ஏழு நாளில் எப்படி 210 கோடியென தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அவர் கூறியதாவது வாரிசு 210 கோடி வசூல் என்பது உண்மை இல்லை என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார் ஏனென்றால் லலித்குமார் வாங்கியது தமிழக ரிலீஸ் உரிமை மட்டுமே அதிலும் சில முக்கிய இடங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது மேலும் ஓவர்சீஸ் உரிமையை வேறு நிறுவனம் பெற்றது இதனால் உலக அளவில் வசூல் நிலவரம் லலித்குமார் அவர்களுக்கு எப்படி தெரியும்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் வசூல் என்பது முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும் மேலும் வாரிசு திரைப்படம் தனியாக ரிலீஸ் ஆகவில்லை அத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அப்படி இருக்கையில் வாரிசு 210 கோடி என்பது 200% உண்மை இல்லை என கூறியுள்ளார்.
ஒருவேளை விஜயின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் லலித்குமார் என்பதால் அவர் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கலாம் ஏனென்றால் இப்படி வெளியிட்டால் அடுத்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைக்கும் என வியாபார யுக்தியை கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளார் இப்படி திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.